இன்றையபஞ்சாங்கம் 20.09.2021 இன்றைய_ராசிபலன்.

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:03

சந்திர உதயாதி நாழிகை : 17:56
சந்திராஸ்தமனம் இல்லை

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : புரட்டாசி 4

பட்சம் : சுக்ல பக்ஷம்

திதி : பௌர்ணமி – 29:24 வரை

நட்சத்திரத்தன்று : பூரட்டாதி – 28:02 வரை

யோகம்: சூலம் – 15:24 வரை

முதல் கர்ணன் : பத்திரை – 17:22 வரை
இரண்டாவது கர்ணன் : பவம் – 29:24 வரை

சூரிய அடையாளம் : கன்னி
சந்திரன் அடையாளம் : கும்பம் – 21:51 வரை

அபிஜித் : 11:38 – 12:26

துர்முஹுர்த்தம் : 12:26 – 13:14
14:51 – 15:39

அமிர்தகாலம் : 19:51 – 21:29

Varjyam : 10:01 – 11:40

ராகுகாலம் : 07:32 – 09:02

குளிகை : 13:32 – 15:03

யமகண்டம் : 10:32 – 12:02

சந்திராஷ்டமம்
ஆயில்யம்

💐மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

💐ரிஷபம்

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புதுப் பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

💐மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக செயல்படுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

💐கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

💐சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

💐கன்னி

கன்னி: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

💐துலாம்

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

💐விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியே வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

💐தனுசு

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மைகிட்டும் நாள்.

💐மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும். மதிப்பு கூடும் நாள்.

💐கும்பம்

கும்பம்: கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

💐மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பி கொண்டிருக்காதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

Leave A Reply

Your email address will not be published.