நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கைது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூரில் அமைத்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றதால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ் மாநகரசபை உறுப்பினர் ரஜீவ்காந், உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 2.30 மணியளவில் நல்லூரில் அமைத்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபில் முன்னணியினர் அஞ்சலி செலுத்த முயன்றபோது பொலிஸாரால் தடுக்கபட்டது.

இதனால் தூபி முன்றலில் கஜேந்திரன் தீபமேற்றினார். தீபத்தினை பொலிஸார் காலால் அணைத்தனர். இதனால் பொலிஸார் மற்றும் நினைவேந்தல் மேற்கொண்ட தரப்பிற்கிடையே முறுகல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ் மாநகரசபை உறுப்பினர் இராஜசிறீஸ்காந்தன், உட்பட மூவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.