இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கென நிதியுதவி.

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் பிரதமரும் புத்தசாசன மத விவகார மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கென நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று இருந்தன.

இவ்வாறு அம்பாரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 49 இந்து ஆலயங்களுக்கு சுமார் 49இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

அந்தவகையில் ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் இந்த ஆலயங்களின் புனரமைப்புக்கான நிதியுதவி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீசேகரன் மாவட்ட பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றம் இந்து ஆலயங்களின் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தன.

இங்கு உரையாற்றிய அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இலங்கை அரசு பல சவால்களை எதிர்கொண்ட போதும் பிரதமர் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கு நிதியுதவி வழங்கி வைத்மையிட்டு தொடர்பாக இந்து ஆலயங்கள் சார்மாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.