ஜனாதிபதி வந்தவுடன் நாட்டை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ இலங்கைக்கு வந்த பின்னர் நாட்டை மீண்டும் திறப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்குவார் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மக்கள் சுகாதார வழிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடித்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புத்தாண்டு உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக கொண்டாடுமாறு அவர் கேட்டுக்கொண்டார், அவ்வாறு இல்லையெனில் கொரோனா அலைகள் மீண்டும் வருவது தடுக்கப்படாது என்றும் கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இன்று நாட்டில் திருப்திகொள்ளும் வகையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் கொரோனா மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

நாட்டைத் திறக்க சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 50% பேர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியும் பெற்றுள்ளனர் என அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.