ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கி 3 பேர் பலி.

அமெரிக்காவில் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சிகாகோ நகரிலிருந்து சியெட்டல் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சுமார் 141 பயணிகளும், 16 பணியாளர்களும் இருந்தனர். திடீரென்று ரெயில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்த ரயிலை இயக்கிய அம்ட்ராக் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அந்த ரெயில் பயணம் செய்த அனைத்து பயணிகளையும், பணியாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

மூன்று பேரின் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த உறுதியாக தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இருப்பதாக அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.