கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் மொயீன் அலி.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி உடனடியாக ஓய்வு அறிவிக்கவுள்ளார். 34 வயதாகும் மொயீன் அலி 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், டெஸ்ட் வடிவத்தில் ஆடும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார்.

வரும் மாதங்களில் வீட்டை விட்டு பிரிந்து நீண்ட காலம் வெளிநாட்டில் இருக்க வேண்டி வரும் என்று நினைக்கும் மொயீன் அலி அது இனிமேல் சாத்தியமில்லை என்று கருதுகிறார். டி20 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் பிறகு ஆஷஸ் தொடருக்காகச் செல்ல வேண்டும். இப்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எமிரேட்சில் ஆடிவருகிறார் மொயீன் அலி. இந்நிலையில் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், கேப்டன் ஜோ ரூட் ஆகியோரிடம் தன் டெஸ்ட் ஓய்வை விஷயத்தை தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அவர் தொடர்ந்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.