ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். இவரும் ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

22 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 31 ரன்கள் குவித்து வெளியேறினார். அதிரடியாக ஆடிய எவின் லீவிஸ் 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 19 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இரு வீரர்களும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். 17 பந்துகளை சந்தித்த படிக்கல் 22 ரன்களில் வெளியேறினார்.

அடுத்துவந்த ஸ்ரீகர் பாரத் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் கோலி 25 ரன்களில் வெளியேறிய நிலையில் அடுத்துவந்த மேக்ஸ்வெல், பாரத் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்புடன் ஆடிய பாரத் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த 153 ரன்களை குவித்தது.

இதனால், ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிசூர் ரஹ்மான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை

Leave A Reply

Your email address will not be published.