சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மெஸ்சி 121 கோல் அடித்து சாதனை.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியும் மான்செஸ்டர் சிட்டி அணியும் மோதின .
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 8வது நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியின் இட்ரிசா குயே ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என (பிஎஸ்ஜி) அணி முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 74 வது நிமிடத்தில் (பிஎஸ்ஜி ) அணியின் லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். இதனால் 2- 0 என்ற கோல் கணக்கில் (பிஎஸ்ஜி ) அணி முன்னிலை வெற்றி பெற்றது. ஆட்டம் முழுவதும் மான்செஸ்டர் சிட்டி அணியால் கோல் அடிக்க முடியவில்லை . ஆட்ட நேர முடிவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மெஸ்சி அடித்த கோல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக அவர் அடித்த முதல் கோல் ஆகும் .மேலும் இது சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மெஸ்சி யின் 121 வது கோல் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.