சுகாதார வழிகாட்டல்களை மறந்தால் மீண்டும் ஆபத்து! எச்சரிக்கை..

“கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு மக்கள் அதனைப் பின்பற்றாவிட்டால் மிக மோசமான விளைவுகளை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்.”

இவ்வாறு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் பொதுப்போக்குவரத்துகளை முடிந்தளவு தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை நாட்டு மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.

பாடசாலைகளைத் திறப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே பாடசாலைகளைத் திறக்க முடியும்.

அநேக வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டிருந்த கை கழுவுவதற்கான தண்ணீர் வசதிகள் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டாலும் அங்கு தண்ணீர் தடைப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது.

அதேவேளை, பல்வேறு கட்டுக்கதைகளை நம்பி சிலர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாமல் உள்ளமை தெரியவருகிறது. எனவே, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.