சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் மாதிரி தோட்டம் கையளிப்பு.

சர்வதேச சிறுவர்தினத்தினை முன்னிட்டு சிறுவர் மாதிரி தோட்டம் கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனின் பங்குபற்றுதலுடம் (01) மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் இடம்
பெற்றது.

2021 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பட்டினியற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை கட்டியெழுப்பும் நோக்கில், அனைத்திலும் முன்னுரிமை சிறுவர்கள் எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் ஒரு இலட்சம் பலா மரக்கன்றுகளை நாடளாவிய ரீதியில் சிறுவர் கழக சிறார்கள் மூலம் நடப்பட்டு வருகின்றது. இதன்மூலம் சமூகத்திட்கு அவற்றின் பயனை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சின் ஏட்பாட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகளை திணைக்கள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தருக்கான மாவட்ட இணைப்பாளர் வீ. குகதாசன் ஒழுங்கமைப்பில் திராய்மடு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாதிரி தோட்டம் சிறுவர்களால் பராமரித்து முன்னெடுக்கும் வகையில் கையளிக்கப்படும் நிகழ்வில் பிரதம அதிதிய அரசாங்க அதிபர் கருணாகரன் கலந்து கொண்டார்.

இதன்போது அரசாங்க அதிபர் கருணாகரன் சிறவர்களால் பராமரிக்கப்படும் மாதிரி தோட்டத்தினை கையளித்ததுடன் வைபவரீதியாக பலாமரம் ஒன்றையும் நட்டு வைத்தார். மேலும் மலரும் மொட்டுக்கள் சிறுவர்கழக உறுப்பினர்களுக்கான பலாபரக் கண்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பயன்தரும் பழமரக் கண்றுகளும் சிறுவர்களால் நடப்பட்டன.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலர் ஆ. நவேஸ்வரன், யுனிசெப் நிறுவன சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர் அன்று லாசரஸ், செரி நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் தர்சன், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பீ.பீ.சீ.சீ நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழக சிறார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.