விபசார விடுதி பொலிஸாரால் முற்றுகை! – அறுவர் மாட்டினர்.

கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபசார விடுதியை நடத்திச் சென்ற இருவர், அதற்கு உடந்தையாக இருந்த நான்கு பெண்கள் உள்ளடங்களாக அறுவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு, எப்பாவல, அநுராதபுரம், கொடக்கவெல, பகினிகஹவௌ மற்றும் கந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 21, 36, 41, 23 மற்றும் 47 வயதுகளையுடைய அறுவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.