மாவட்ட செயலகத்தில் இன்று உத்தியோகத்தரினால் சிரமதானம்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உற்பத்திறன் மேன்படுத்தல் செயல்பாட்டினை முன்னெடுக்கும் நொக்குடன் வளாகத்தினை சுத்திகரிக்கும் செயல்தத்திட்டத்தினை இன்று மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

செயலகத்தின் சகல பிரிவினரும் சிரமதானப் பணியில் கலந்துகொண்டு செயலக வளாகத்தின் புறச் சூழலை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வந்தமைகுறிப்பிடத்தக்கது.

உற்ப்பத்திறனை மேன்படுத்துவதன் ஊடாக வினைத்திறனான சேவையினை சேவை நாடிகளுக்கு வழங்கவும் தடையின்றிய துரிதமான சேவையினை மக்களுக்கு உரியகாலத்தில் வழங்கவும் இச்செயல்பாடுகள் ஊடாக முன்னெடுக்கமுடியும் எனும் அரசின் திட்டத்தினை அமுல்ப்படுத்தும் செயல்த்திட்டமாக அமைகின்றது.

உற்ப்பத்தி திறன் மூலமாக தலைமைத்துவம் சேவை வழங்கள் பணிக்குழுவினரி திருப்திகரமான பூரன ஒத்துளைப்பான சேவையினை பெற்றுக்கொள்வதும் புத்தாக்கம் மிக்க சேவையினுடாக அடைவ மட்டத்தினை உச்சமான அளவு அடைவதும் சேவைநாடியின் நன்மதிப்பினை பெறுவதுமானதாக அமையும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்ப்பத்திறன் போட்டியில் பங்கொள்வதற்கென 54 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது அதில் 49 நிறுவனங்கள் போட்டியில் பங்கு பற்றும் தகுதினை கொண்டிருந்தது அதன் அடிப்படையில் 20 பாடசாலைகளும் 29 திணைக்களங்களும் போட்டியில் பங்கு கொள்கின்றது மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தேசியரிதியில் பரிந்துரைசெய்யப்பட்டு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கப்படும் கடந்த முறை உற்பத்திறன் போட்டியில் அகில இலங்கை ரிதியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மூன்றாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.