விபத்தினால் ஓமந்தை பகுதியில் மின்சாரத்தடை.

வவுனியாவில் ஏ 9 வீதியில் மாணிக்கவளவு சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதிக்கான மின் தடைப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டதுடன் வாகனம் சேதமடைந்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ் விபத்தினால் மின் கம்பம் உடைந்து வீழ்ந்ததனால் ஓமந்தை பகுதியின் சில கிராமங்களுக்கான மின்சாரம் 3 மணியில் இருந்து தடைப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.