பாரிய கண்டனப் போராட்டம் முல்லைத்தீவு கடலில்….

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டனப் போராட்டம் முல்லைத்தீவு கடலில் இருந்து பருத்தித்துறை நோக்கி ஆரம்பம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மீனவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டமானது முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரையில் கடல்வழியாக முன்னெடுக்கவுள்ளது.

வட பகுதியில் அதிகரித்து வரும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளில் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், எந்தவிதமான நடவடிக்கைகளையும் அரசு தரப்பு எடுக்காத நிலையில், இந்தப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சுமார் 50 படகுகளில் முல்லைத்தீவில் இருந்து புறப்பட்ட போராட்டக்காரர்கள் பருத்தித்துறை வரை சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்தப் போராட்டக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், சிறிதரன், சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மீனவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இந்தப் பேரணியில் சுமார் 400 பேர் வரையிலான மீனவர்களும் போராட்டக்காரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.