தேர்தல் நடைபெறும் இடத்தில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் காலுக்கு சிகிச்சை அளித்த எஸ்.பிக்கு …குவியும் பாராட்டுகள்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், Next துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்,  துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.  கடந்த புதன்கிழமை பதவியேற்ற ஊராட்சி பிரதிநிதிகள், இன்றைய தேர்தலில் வாக்களித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் இடத்தில் மதுராந்தகம் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

போலிசாரின் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இரந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் ஓடி வரும் போது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது.

அதை பார்த்த காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாதிக்கப்பட்ட ஆய்வாளருக்கு முதல் உதவி சிகிச்சை செய்தார். காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடதக்கது. காவல் ஆய்வாளரின் காலை பிடித்து சிகிச்சை செய்த விஜயகுமாருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.