‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் 3 தமிழர்களுக்கும் இடம்! அரசு தீர்மானம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை அமுலாக்கும் வகையில் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.

மேற்படி செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் இல்லையென்பதை இன்று மாலை நடந்த ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து வடக்கு , கிழக்கு , மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதியளித்துள்ளார். அந்த மூன்று உறுப்பினர்களின் பெயரை செயலணிக்கு அனுப்ப மேற்படி தமிழ் அரசியல் பிரமுகர்கள் கேட்கப்பட்டனர் எனவும் அறியமுடிந்தது.

ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.