ஆப்கான் முன்னாள் கேப்டன் இன்று நடைபெறும் போட்டியுடன் ஓய்வு.

ஆப்கான் முன்னாள் கேப்டன் இன்று நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான், டி20 உலகக் கோப்பை போட்டியில் தற்போது விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று நடைபெறும் நமீபியாவிற்கு எதிரான ஆட்டத்துடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவர் இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுவதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ளது.

33 வயதான அஸ்கர் ஆப்கன், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தபோது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். 52 டி20 போட்டிகளில் கேப்டனாக விளையாடிய அவர் 42 வெற்றிகளுடன் 81.73 வெற்றி விகிதத்தை கொண்டுள்ளார். மொத்தமாக 74 டி20 போட்டிகளில் விளையாடி 1351 ரன்களை அடித்துள்ளார்.
கடைசியாக அவர் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில்10 ரன்கள் அடித்துள்ளார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.