சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்!

தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இதன்போது விகிதார முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சீர்திருத்தம் – பொது நிலைப்பாடு
1)பலமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில் பாராளுமன்ற மாகாணசபை உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்து மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளினதும் மற்றும் அனைத்து சமூக குழுவினர்களினதும் பிரதிநிதித்துவங்களுக்கு வழிவகுக்கும் வண்ணம் முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும்.

இதன்மூலம் பாராளுமன்றமும்இ மாகாணசபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் தமது பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலை படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் செயற்பட முடியும்.
2)பாராளுமன்றத்தினதும் மாகாணசபைகளினதும் உள்ளூராட்சி மன்றங்களதும் கட்சி அங்கத்துவ எண்ணிக்கை தொகுப்பு வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்த வாக்கு ஆணையை அதிகபட்சமாக பிரதிபலிக்க வேண்டும்.

வெற்றி பெரும் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் தாம் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தை விட அதிக விகிதாசார எண்ணிக்கையில் ஆசனங்களை எடுத்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். வாக்கு விகிதாசாரமும் சபை அங்கத்தவர் எண்ணிக்கை விகிதாசாரமும் சாத்தியமானளவில் ஒன்றை ஒன்று ஒத்து போக வேண்டும்.

இந்நிலைமையை விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
3)உள்ளூராட்சி மாகாணசபைகள் பாராளுமன்றம் ஆகிய மூன்று மட்ட தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள் தெரிவுக்குழுவினால் ஒரே வேளையில் தயார் செய்யப்பட்டு ஒரே சட்டமூலத்தின் மூலம் அரசியலமைப்பு திருத்தமாக கொண்டு வரப்பட வேண்டும்.
4)ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்களை முன்னுரிமை கொடுத்து விகிதாசார முறையின் கீழ் நடத்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.
என அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.