மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து ஆரம்பம்.

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய செகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (31) முதல் 50 சதவீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த காலம் போன்று தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஒரு வருட காலம் எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முன்னர் போன்று வழமையான நேரங்களுக்கு அமைய நாளை (01) முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் நாளை (01) முதல் அலுவலக ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.