கொரோனா அதிதீவிரம் மக்களே மிக அவதானம்.இராணுவத் தளபதி எச்சரிக்கை.

“சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொரோனாத் தொற்று நோய் இன்னும் அதிகமாகப் பரவி வருவதால் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று முன்னணி இராணுவத்தினருக்குப் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அன்றாடம் 500 முதல் 600 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கொரோனாத் தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

மக்களின் வாழ்க்கையைக் கருத்தில்கொண்டு மாகாணங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பெறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.