பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் திறந்து வைப்பு.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் (01) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த நிலையத்தை திறந்து வைத்தார்.

அத்துடன் இதன்போது அரசாங்க அதிபர் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவுக்கான ஒன்லைன் இணைய சேவையையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

குறித்த சேவை நிலையமானது UNDP மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான காவியா அமைப்பின் உதவியுடன் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இச் சேவை நிலையம் ஊடாக சிறு தொழில் அபிவிருத்தி,சந்தைப்படுத்தல், இணைய சந்தைப்படுத்தல் ஆலோசனை,வியாபார கருத்திட்டம் தயாரித்தல், பயிற்சிநெறிகள் உள்ளடங்களாக பல முயற்சியான்மை அபிவிருத்தி சேவைகளை பொது மக்களுக்காக இதன் ஊடாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மக்கள் பலர் சிறு தொழில் முயற்சி வியாபார அபிவிருத்தி ஊடாக நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,காவியா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோக மலர் அஜித் குமாரி, சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் க.குகதாசன்,UNDP யின் கருத் திட்ட அதிகாரி குலசேகரம் பார்தீபன் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.