இங்கிலாந்தில் 40,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 40,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால், தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,97,311 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,40,672 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.