9 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கத்தின் உதியுயர் விலை நேற்றைய தினம் பதிவு

9 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் அதியுயர் விலை நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

தற்போது ஒரு அவுண்ஸ் தங்கத்தின் சந்தைப்பெறுமதி 1,930 அமெரிக்க டொலர் என உலக தங்கப்பேரவை அறிவித்துள்ளது.

ஏற்கனவே சந்தையில் 1920.24 அமெரிக்க டொலர்களாக இது காணப்படுகின்ற அதேவேளை 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த தொகை பதிவாகியிருந்தது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,517 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதுடன் 7 மாத காலப்பகுதியில் இந்த பெறுமதி 400 டொலர்களினால் அதிகரித்துள்ளது.

சந்தை கொடுக்கல் வாங்கல்களில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்தமையே இந்த விலை ஏற்றத்திற்கான காரணமென சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.