6 வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் இரட்டிப்பாக அதிகரிப்பு – WHO

6 வார காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதென உலக சுகாதார ஸ்த்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எட்னம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி சர்வதேச சுகாதார ஸ்தாபனம் அவசர காலநிலையை பிரகடனப்படுத்திய வேளையில் சீனாவுக்கு வெளியே 100 கொரோனா தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை 6 மாதங்களுக்கு பின்னர் 16 மில்லியனையும் தாண்டியுள்ளது.

உலக சுகாதார ஸ்த்தாபனம் வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றியமையினால் சீனா, கனடா, ஜேர்மன், தென்கொரியா ஆகிய நாடுகளில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடிந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments are closed.