இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித் அசலங்க.

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நாளை

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை (14) நடைபெறவுள்ளது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம் பெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பயிற்சி ஆட்டம் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.