நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், இறுதியில் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொதப்பியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சாமாக கிளென் பிலீப்ஸ் 33 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா – துணைக்கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அசத்தியது.

இதில் இருவரும் அரைசதம் அடித்ததுடன், 100+ பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். பின் 65 ரன்களில் கேஎல் ராகுல் விக்கெட்டை இழக்க, 55 ரன்காளில் ரோஹித்தும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவும் ஒரு ரன்னோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அடுத்து வந்த ரிஷப் பந்த் அடுத்தடுத்து இரு சிக்சர்ளை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி 17.2 ஓவர்கலில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Leave A Reply

Your email address will not be published.