எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை….

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து எரிவாயு சிலிண்டர்களின் வாயு கலவை குறித்து ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் வருடாந்தம் 35 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொதுவாக அவற்றில் 5 அல்லது 6 விபத்துக்களே பதிவாகின்றன. 2015 ஆம் ஆண்டு முதல் லாப் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களில், 12 விபத்துக்கள் வீடுகளிலும், 9 விபத்துக்கள் வியாபார நிலையங்களிலும் மற்றும் 2 விபத்துக்கள் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களிலும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் எரிவாயு சிலிண்டர்களின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கான வர்த்தமானி வெளியிடுவது மற்றும் சட்டங்களை இயற்றுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிவாயு சிலிண்டர்களினூடாக ஏற்படுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கையை முற்றாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.