பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாரடைப்பில் மரணம்.

ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் (72) வயது மாரடைப்பால் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ‘சூர்யவம்சம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘மகதீரா’ உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர் மகதீரா படத்திற்குத் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update :

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக Behindwoods செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.