முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு கண்டனங்கள்.

முல்லைத்தீவில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்தபோது அதன் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ காவரணில் இருந்த நான்கு இராணுவத்தினர் முள்ளுக் கம்பிகள் சுற்றிய பச்சை மட்டையால் அவரை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அவர்படுகாயமடைந்துள்ளார்.

ஊடக அடக்குமுறையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு இராணுவ ஆட்சியினை முன்னெடுத்து வருகிறது இப் பேரினவாத அரசாங்கம். இவ்வரசாங்கத்தின் கடந்த ஆட்சிக்காலத்தின் போதும் மிக மோசமான ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்களைக கடத்திப் படுகொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்திய இராணுவத்தினர் தண்டிக்கப்படல் வேண்டும். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஊடக அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.