“திஸாரா ஆட்ஸ் சென்டர்”-இன் புதிய காட்சியறை பிரதமரினால் திறந்து வைப்பு!

தெஹிவளை பெல்லந்தர வீதி இல 29/1 எனும் இடத்தில் அமைந்துள்ள “திஸாரா ஆட்ஸ் சென்டர்”-இன் புதிய காட்சியறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அர்களினால் நேற்று (30) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

புத்தர் சிலைகள், தெய்வ உருவச்சிலைகள், சந்திரவட்டக்கல் போன்ற பல சிற்பங்கள் இக்காட்சியறையில் காணப்படுகின்றன.

ஜனாதிபதி விருது பெற்ற சிற்ப கலைஞரான யூ.எல்.விமல் பிரேமசந்திர அவர்களினால் 1993ஆம் ஆண்டு “திஸாரா ஆட்ஸ் சென்டர்” ஆரம்பிக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

யூ.எல்.விமல் பிரேமசந்திர அவர்களின் திடீர் மறைவை அடுத்து 2010ஆம் ஆண்டு முதல் “திஸாரா ஆட்ஸ் சென்டர்”-இனை நடத்திவரும் அவரது மனைவி திருமதி.சுவர்ணா நீலவள அவர்கள் இப்புதிய காட்சியறையை நிர்மாணித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் திஸாரா ஆட்ஸ் சென்டரின் உரிமையாளர் திருமதி.சுவர்ணா நீலவள உள்ளிட்ட அந்நிலையத்தின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.