ஹட்டனில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு .

ஹட்டன், திம்புல, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடிலி தோட்டத்திலுள்ள வீடொன்றின் சமைய லறையிலிருந்த எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப் பட்டிருந்த எரிவாயுக் குழாய் மற்றும் சீராக்கி வெடித்துச் சிதறியதாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (30) மாலை 5 மணியளவில் குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திம்புல பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு சிலிண்டருக்கும் எரிவாயு அடுப்புக்கும் இடையில் இணைக்கப்பட்டிருந்த குழாயின் ஒரு பகுதியே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வீட்டிலிருந்த பாடசாலை மாணவி ஒருவர் எரிவாயு அடுப்பைப் பற்ற வைக்க முற்பட்ட போது எரிவாயுக் குழாய் மற்றும் ரெகுலேட்டர் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதன்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தோட்டத் தொழிலாளர்கள் தீயைக் கட்டுப்படுத்தி யுள்ளனர்.

மேலும் வீட்டின் சமையல் அறையிலிருந்த பல வீட்டு உபயோகப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொட்டகலையில் இருந்து முதலாவது எரிவாயு சிலிண்டரை வாங்கியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக திம்புல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.