தருமபுரம் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை அடித்துக்கொலை.

இளம் குடும்பத்தர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் 30.11.2021 நேற்றையதினம் மாலை 4,30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டிமூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் 01.12.2021 இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இராமையா இராமஜெயம் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.