ஜேர்மனியில் கொரோனா பரவல் தீவிரம். சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை குறைந்தபாடில்லை. உலகளவில் கொரோனா குறைந்தாலும் ஜேர்மனி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் உச்சம் அடைந்து வருகின்றது.

இந்நிலையில் ஜேர்மனி சுகாதாரத்துறை சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 9 மாதங்களில் விட இன்று மட்டும் அதிகளவான உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்குள் சுமார் 6000 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 67,186 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 446 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கொரோனா 4ஆம் அலை உருவாகுவதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையை எடுக்க ஜேர்மனி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தல் தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவலுக்கு எதிரான செயற்பாடுகள் தாமதமாக நடைபெறுவதாக ஜேர்மனி அரசாங்கம் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் நான்கு பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.