அடுத்து இரு வாரங்களில் பாராளுமன்றத்தில் பல குழுக் கூட்டங்கள்.

▪️ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோப் குழு முன்னிலையில் அழைப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்வரும் 06ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் (02) கூடவுள்ளது.
அத்துடன், அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் (02) கூடவுள்ளது.

வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலும், போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் காமினி லொக்குகே தலைமையிலும் எதிர்வரும் 03ஆம் திகதி கூடவுள்ளன.

கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் விமல் வீரமன்ச தலைமையில் எதிர்வரும் 06ஆம் திகதியும், நிதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் அலி சப்ரி தலைமையில் எதிர்வரும் 08ஆம் திகதியும் கூடவுள்ளன. அதேநேரம், அன்றையதினம் கல்லோயா பெருந்தோட்ட நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.