அனுருத்த பாதெனியவின் GMOA தலைவர் பதவிக்கு தடை

GMOA தலைவரான வைத்தியர் அனுருத்த பாதெனிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை சங்கத்தின் நிர்வாக சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைக்குமாறு மொரட்டுவ மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உறுப்பினர் கட்டணம் வசூலிக்கவோ, சட்டக் கட்டணம் வசூலிக்கவோ, கிளை அலுவலகத் தேர்தல் நடத்தவோ, அதிகாரப்பூர்வ பெயரைப் பயன்படுத்தவோ அல்லது சங்கத்தின் பெயரில் தோன்றவோ தடைசெய்யப்பட்டுள்ளது.

வேறோர் மருத்துவ குழு தாக்கல் செய்த புகாரை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவை மொரட்டுவ மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.