பசில் ராஜபக்சவுக்கு நோ சொன்ன மோடி , சம்பந்தனை தில்லி வருமாறு அழைத்துள்ளார் !

கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியப் பயணத்தில் ஈடுபட்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்திப்பதற்கு நேரம் இல்லை என தட்டிக் கழித்த , இந்திய பிரதமர் நரேந்திர மோடி , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்திக்க அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த வாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை, இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் காரியாலயத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்த வாரத்தில் , சுரேஷ் பிரேமச்சந்த்ரனின் புதனுவனின் திருமண விழா நடைபெறவுள்ளதால் , ஒரு வாரம் கழித்து சந்திப்பை தள்ளி வைக்க முடியுமா என ஆர்.சம்பந்தன் கேட்டிருந்தார்.

அதை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய பிரதமர் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை ஒரு வாரத்துக்கு பின் போட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது , ​​இலங்கை தொடர்பான தீர்மானகரமான பல விடயங்கள் பேசப்படவுள்ளதாக அரசியல் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் புதல்வன் , படுகொலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களது மகளை திருமணம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.