பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டதைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் குறித்த பல்கலைக்கழகங்களுக்கும் பேராசிரியர் தகைமையுடைவர்கள் இருப்பது என்பது ஒரு முக்கியமான வளமாகும். அவ்வாறான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் வர்த்தகர் சமூகம் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். எம் நாஜிம் தெரிவித்தார்.

அக்குறணை கல்வி மேம்பாட்டுக்கான ஐக்கிய அமைப்பினரின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எஸ். எம். எம். மஸாஹிர் நளீமி அவர்களுக்கு பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டதைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ. எல்.. அன்வர் தலைமையில் இடம்பெற்றது .ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எப். எம். பாஸில் தலைமையின் நெறிபடுத்தலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். எம் நாஜிம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

;நான் தென்கிழக்குபப் பல்கலைக்கழகம் செல்லும் போது ஒரு பேராசிரியர்களும் இருக்க வில்லை. முதல் பேராசிரியராக நண்பர் ரமீஸ் அப்துல்லாவுக்குத் தான் கிடைத்தது. உண்மையிலேயே நான் அங்கு செல்லும் முன்னரே பேராசிரியர்கள் உருவாகி இருக்க வேண்டும். துரதிருஷ;டவசமான நிலைமை என்னவெனில் பேராசிரியர்களை உருவாக விடவில்லை. இது தான் உண்மை. என்னால் பேராசியர்களை உருவாக்க முடியாது. பேராசிரியர்களாக அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு தேவையான களத்தை அமைத்துக் கொடுத்து அவர்கள் உருவாகுவதற்கான ஊக்குவித்தலைச் செய்தேன். வியாபார சமூகம் இன்றைக்கு ஒரு பேராசிரியரை உருவாக்கிக் காட்டியிருக்கின்றார்கள். ஆனால் அதில் மாத்திரம் சந்தோசப்பட்டு விட்டு இருந்து விட முடியாது.

எங்களுடைய சமூகத்திற்கென இஸ்லாமிய துறைக்கு ஒரு பேராசிரியர் இல்லாத குறை இருந்தது. இது இப்போது கிடைத்து விட்டது. இலங்கையில் ஓர் அரபுத் துறையில் ஒரு பேராசிரியர் ஒருவது தேவை இருக்கிறது. அரபுத் துறையில் பேராசியரிர் இமாமைத் தவிர நாங்கள் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை பேராசிரியராக உருவாக்க வில்லை. பேராசிரியர் இமாம் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்குப் பின்னர் இன்னும் அரபுத் துறையில் ஒரு பேராசியர் ஒருவர் இல்லை. அதற்கான வெற்றிடம் இருந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் 50 வருடங்கள் பல்கலைக்கழங்களில் படிப்பிக்கின்றோம். நான் 75 வருடங்கள் படிப்பிக்கின்றோம். 75 வருடங்களுக்கு பிறகுதான் ஒரு பேராசிரியர். அரபுத் துறையில் ஒரு பேராசிரியர் ஒருவரை உருவாக்குவதற்கு அக்குறணை மக்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. அரபுத் துறையில் உள்ள ஒரு பேராசிரியரை உருவாக்க முடியும். அது மாத்திரமல்ல இன்னும் எத்தனையோ கற்க நெறித் துறைகள் இருக்கின்றன. எங்கள் சமூகத்தில் நிபுணத்துவம் வாய்ந்த துறை போகக் கற்கக் கூடிய கற்கை நெறிகள் பல உள்ளன. அதாவது மன நல வைத்தியர்கள் இருக்கின்றர்கள். இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர் இல்லை என நான் கருகின்றேன்.

எனவே இது போல் எத்தனையோ துறைகள் இருக்கின்றன. வியாபாரம் செய்யக் கூடிய ஒரு வர்த்தகப் பிரமுகர்களுக்கு பங்கு இருக்கின்றது. இப்படி பாராட்டு விழா நடத்துவது நல்லதொரு விடயமாகும் இத்துறை சார்ந்தவர்களுக்கு ஊக்கிவித்தலை வழங்குவதோடு, எதிகால சந்ததியினர்களின் நலன்கருதி ஒவ்வொரு துறைகளிலும் தலைசிறந்தவர்களை உருவாக்குவதற்கு ஒரு முன்மாதரிமிக்க நிகழ்வாக இதனைப் பார்க்கின்றேன். அதேவேளை சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கும் இந்த தேவையை எடுத்துக் காட்ட முடியும். இந்த அக்குறணை கல்வி மேம்பாட்டுக்கான ஐக்கிய அமைப்பு எடுத்துள்ள முயற்சியை பாராட்டத் தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா விசேட உரையினையும் முன்னாள் அக்குறணை முஸ்லிம் பாலிகா கல்லூரி அதிபர் ரிஹானா செய்ன், முன்னாள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். ஏச். எம். சபீக், பேருவளை ஜாமியா நளிமியா கலாபீடத்தின் பகுதிநேர விரிவுரையாளர் உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர், அக்குறணை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எம். எப். எம். அஸ்மி, அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம். ஏ. எம். சியாம் (யூசுபி) ஆகியோர் வாழ்த்தரையினையும் நிகழ்த்தினர். அரபு மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். எம். எம். மஸாஹிர் அவர்கள் ஏற்புரையினையும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் எம். ஜே. எம். பைசல் நன்றியுரையினையும் நிகழ்த்தினார்கள்.

இதில் விசேட அம்சமாக வரவேற்பு கீதம், வாழ்க்கை வரலாறு தொடர்பான காணொளி காட்சிப்படுத்தல், மலர் வெளியிடுதல் பேராசிரியர் மஸாஹிரைப் பாராட்டி கௌரவித்தல் உள்ளிட்ட பல்வேறு பட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.