புதிய அடையாளத்துடன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

நாட்டில் இடம்பெற்ற வெடிப்புக்களை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சிலிண்டரை மீள நுகர்வோருக்கும் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு விற்பனை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரில் ஒரு வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதிய சிலிண்டர்கள் வால்வுகளில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறை இடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதேவேளை பழைய சிலிண்டர்களில், சாதாரண பாதுகாப்பு உறை மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
3 நிபந்தனைகளின் அடிப்படையில் நேற்று முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அனுமதி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பன தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டும். எனினும் தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாக, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.