சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரவில் தங்க பக்தர்களுக்கு அனுமதி…!

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்தமுறையும் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுளளது.

நடப்பாண்டு தினசரி 40,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பக்தர்களின் நலனுக்காக கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோயில் சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்கலாம் எனவும் பம்பை ஆற்றில் புனித நீராடலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதேபோல் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் பாதை வழியாக மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.