தைவான் நாட்டில் தற்போது முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு.

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து பல நாடுகளும் அச்சத்திலேயே உள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், தொற்று பாதிப்பால் இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இதுவரை 33 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தைவான் நாட்டில் தற்போது முதல் முறையாக 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க நாடான எஸ்வாடினி, மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விமானத்தில் அவர்களுடன் பயணம் செய்வதற்களையும் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக தைவான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.