சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்கள் கைது.

யாழ்ப்பாணம் − நெடுந்தீவு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் நேற்றிரவு (18) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா, தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் 6 படகுகளை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை கரைக்கு அழைத்து வந்து, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.