தொழில் நுட்ப கோளாரால் வீழ்ந்த விமானத்தை கடுகதி ரயில் மோதித் தள்ளியது – நூலிழையில் விமானி மீட்பு (வீடியோ)

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே அதிவேக ரயில் பாதையில் விபத்துக்குள்ளான சிறு விமானம் ஒன்று தரையிறங்கிய போது , அவ்வழியாக வந்து கொண்டிருந்த அதிவேக ரயிலால் மோதப்பட்டு சேதமானதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சிறிய விமானத்தின் விமானி ஞாயிற்றுக்கிழமை நூலிழையில் இரண்டு முறை மரணத்திலிருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளார். முதலில் அவர் ரயில் தண்டவாளத்தில் தரையிறங்கியபோது, பின்னர் பயணிகள் ரயில் விமானத்தில் மோதுவதற்கு சற்று முன்புமாகும்.

நொறுங்கிய செஸ்னா 172 விமானத்தின் காக்பிட்டிலிருந்து இரத்தம் தோய்ந்த விமானியை மீட்டெடுக்க அதிகாரிகள் ஆவேசமாக செயல்படுவதை பாடிகேம் வீடியோ காட்டுகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“போ! போ! போ! போ! போ!” என யாரோ கத்தும் சத்தமும் , ரயிலின் ஹாரன் சத்தமும் அதிகாரிகள் அந்த நபரை இழுத்துச் செல்லும்போது கேட்கிறது. அத்தோடு ரயில் வீழ்ந்த விமானத்தை மோதிக் கொண்டு வேகமாக செல்கிறது.


மீட்கப்பட்ட விமானி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

நொடிப் பொழுதில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி கீழே,

Leave A Reply

Your email address will not be published.