ஐரோப்பாவில் ஒரே வாரத்தில் 70 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி.

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது.ஜனவரி முதல் வாரத்தில் இந்த வைரஸ், ஐரோப்பாவில் 70 லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது. 2 வாரங்களில் 2 மடங்காக இந்த பரவல் அமைந்துள்ளது.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் குளுகே, “ இந்த பிராந்தியத்தில் உள்ள 26 நாடுகளில் அவற்றின் மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடுகளின் சுகாதார அமைப்புகள் நிரம்பி வழியும் வாய்ப்பு உள்ளது” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “இதற்கு முன் நாம் கண்ட உருமாறிய கொரோனா வைரஸ்களில் ஒமைக்ரான் மிகவேகமாகவும், பரவலாகவும் நகர்கிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள்ளும் முககவசம் அணிவதை நாடுகள் கட்டாயம் ஆக்க வேண்டும். தடுப்பூசிகள் போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.