நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த ரைசா வில்சன் ‘பியார் பிரேம காதல்‘ படம் மூலம் கதாநாயகி ஆனார். வர்மா படத்திலும் நடித்தார். தற்போது எப்.ஐ.ஆர், சேஸ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரைசா வில்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைசா வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு 2-வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன. நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இருக்குமோ, பாதுகாப்பாக இருங்கள், முக கவசம் அணியுங்கள் என்று கூறியுள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், வடிவேல் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். நடிகர் அருண் விஜய், விஷ்ணு விஷால் நடிகைகள் குஷ்பு, மீனா, திரிஷா, ஷெரின், ஷோபனா ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.