இளையோருக்கு ஒன்றிணைந்த மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சியை மேற்கொள்ள ஆயர்கள் மன்றம் தீர்மானம்.

இளையோருக்கு ஒன்றிணைந்த மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சியை மேற்கொள்ள வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் தீர்மானம்.
இலங்கையின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் இளையோருக்கு ஒன்றிணைந்த மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சியை மேற்கொள்ள வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது என யாழ் மறைமாவட்ட செய்திகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ் கத்தோலிக்க ஊடகத்திற்கும் (சுவிஸ்) அனுப்பிய செய்தியில் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை வவுனியாவில் நடைபெற்ற வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடரில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் அடிப்படையில் ,யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மறைமாவட்டங்களிலிருந்து தலா 12 பயிலுனர்கள் தெரிவுசெய்யப்பட்டு இவர்களுக்கான ஒருமாத கால வதிவிடப் பயிற்சியை மடுத்திருத்தலத்திலுள்ள தியான இல்லத்தில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட விருகின்றன என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய ஒழுங்குகளை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய கிறிஸ்துநாயகம் அடிகள் அவர்கள் நான்கு மறைமாவட்டங்களின் மறைக்கல்வி நிலைய இயக்குனர்களோடு இணைந்து இதற்கான ஏற்பாடுகளையும், ஒழுங்கமைப்புக்களையும் மேற்கொள்வார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜுலை மாதம் இப்பயிற்சி மடு திருப்பதியில் அமையப் பெற்றுள்ள தியான இல்லத்தில் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.