மத்திய பட்ஜெட்டில் ரூ.1லட்சம் கோடி அளவில் கல்விக்கு நிதி ஒதுக்க வேண்டும்.. கல்வியாளர்கள் கோரிக்கை!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்க மத்திய பட்ஜெட்டில் கல்விக்கென ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவம் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கல்வித் துறைக்கு 90 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனோ பரவல் நாட்டின் கல்விச் சூழலை கடுமையாக பாதித்துள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் உள்ளது.

கடந்த ஆண்டு கல்விக்கு 93 ஆயிரத்து 224 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது அதற்கு முந்தைய ஆண்டில் 99ஆயிரத்து 311 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியாண்டில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ரூபாயை கல்விக்கென்று ஒதுக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

புதிய கல்விக் கொள்கையில் கல்விக்கு ஒட்டுமொத்த வருவாயில் 6 முதல் 7 சதவீதம் அளவிற்கு கல்விக் என்று நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் கல்வியாளர்கள் மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கின்றனர்.

மேலும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு கல்விக்கடனுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனாவால் ஏற்ப்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய வேண்டுமென்றால் பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை ஏற்ப்படுத்தி தரும் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வலியுறுத்துகின்றனர்.. பட்ஜெட்டில் இப்படியான அறிவிப்புகள் இடம்பெற்றால்தான் உயர் கல்வி முடித்து வேலைவாய்ப்புக்கு தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் ஏற்படும் என்று வலியுறுத்துகின்றனர்..

கல்வித்துறைக்கு முழு ஊக்கமளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைய வேண்டும் என்கின்றனர்..

கொரோனாவால் ஏற்ப்பட்ட பாதிப்புகளையொட்டி நாட்டின் பொருளாதாரத்தை பல்வேறு துறைகளை மேம்படுத்த 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி பங்களிப்பு திட்டம்..

கொரோனா தடுப்பூசிகாக கடந்த பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி, சுகாதாரத் துறைக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி என கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு ஏராளமாக செலவு செய்துள்ளது.

இருப்பினும் 2020-2021 நிதியாண்டில் இருந்த குறைந்த அளவான 7.3%என்கிற நாட்டின் உள்நாட்டு மொத்த வளர்சி GDP 2021-2022ம் நிதியாண்டில் 9.2% சதவிகிதம் அளவிற்கு வளரும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதிக அளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் எனவே அது சார்ந்து அறிவிப்புகளை எதிர் பார்க்கலாம் என்கின்றனர் அத்துறை சார்ந்த வல்லுநர்கள்.

Leave A Reply

Your email address will not be published.