மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தங்கள் வலைகளை அறுத்து நாசம் செய்தல் மற்றும் படகுகளை சேதம் செய்வதை கண்டித்து பலாலி வடக்கு அன்ரனிபுரம் மீனவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கடற்றொழில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வந்து நமது கடற்பரப்பு மீன்வளங்களை சூறையாடுவது வலைகளை சேதப்படுத்துவதை கண்டித்து நேற்றைய தினம் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு செல்லாது வலைகள் , படகுகளை வீதிக்கு குறுக்காக போட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தவோ அவர்களை தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திருப்பான் நடவடிக்கை எடுக்கவில்லை.

எம்மால் தாக்குதல் நடத்த முடியும் ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்திலேயே நாம் பொறுமை காக்கிறோம் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இந்திய மீனவர்கள் அத்துமீறலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோரினர்.

இதேவேளை வடமராட்சி வத்தாராயனிலிருந்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களது வலைகள் வெட்டப்பட்டு துண்டுகளாக காணப்பட்டன. இவர்களது படகினை இந்திய றோலர் படகுகள் மோதியுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டப்பட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.