எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் வரட்சியான காலநிலை.

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி ,நாட்டின் சில பாகங்களில், இந்தக் காலப்பகுதியில் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதிய மழைவீழ்ச்சி இல்லாமையால், பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

நேற்றைய தினம் வரையில், ரன்தெம்பே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், 20.6 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.

இதன்படி விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 52 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளது.

காசல்றீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 42.3 சதவீதம் வரையிலும், சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 36.9 சதவீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் எவ்வாறிருப்பினும், ரந்தனிகலை மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்மட்டத்தில் உள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.