பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய சேவை ஒன்றியம் புறக்கணிப்பு.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியம் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதன்படி ,தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னதாகவே அறிந்திருந்தும், அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இன்னும் எடுக்காதிருப்பதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய , இன்று காலை 7 மணி முதல் தாம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் சேவைக்கு சமூகமளிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவாரத்திற்குள் தமக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லையாயின், குறித்த வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.