குசல்மென்டிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள குசல்மென்டிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

துரித அன்டிஜென் பரிசோதனையின்போது மென்டிஸ் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அணித்தலைவர் தசுன்சானக தெரிவித்துள்ளார்.

மென்டிசிற்கு பதில் தினேஸ் சந்திமல் விக்கெட் காப்பாளராக களமிறங்குவார்என அவர் அறிவித்துள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 தொடரில்முதலாவது போட்டி வெள்ளிக்கிழமை சிட்னியில்ஆரம்பமாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.